முஷாரப்பின் தேச துரோக வழக்கில் டிசம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு

சிறப்பு நீதிமன்றம் கடந்த நவம்பர் 28ஆம் தேதியே தீர்ப்பை அறிவிப்பதாக இருந்தது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது.


பாகிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் கடந்த நவம்பர் 28ஆம் தேதியே தீர்ப்பை அறிவிப்பதாக இருந்தது.

ஆனால் துபாயில் சிகிச்சை பெற்றுவரும் முஷாரப் தரப்பில் தனது தரப்பு வாதங்களை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் முஷாரப் தனது வாதங்களை பதிவு செய்யலாம் என அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவதைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி தீர்ப்பை அறிவிக்கப்போவதாக சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.